தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அழகான பெண்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும்': திமுக எம்எல்ஏ-வை வச்சு செய்யும் நெட்டிசன்கள் - கல்லூரி கனவு

'ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்தால் மட்டுமே, கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை கிடைக்கும்; அதிலும் பெண்களாக இருந்தால் அழகு முக்கியம்; அழகான பெண்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்எல்ஏ காந்திராஜனின் பேச்சு, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையாக எதிர்வினையாற்றப்பட்டுவருகிறது.

எம்எல்ஏ காந்திராஜன்
எம்எல்ஏ காந்திராஜன்

By

Published : Jul 4, 2022, 12:13 PM IST

Updated : Jul 4, 2022, 5:30 PM IST

திண்டுக்கல்: திமுக எம்எல்ஏ காந்திராஜன் ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்தால் மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை கிடைக்கும். அதிலும் பெண்களாக இருந்தால் அழகு முக்கியம் அழகான பெண்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று பேசிய சர்ச்சைக்குரிய பேச்சால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பள்ளி கல்வித்துறை சார்பில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான 'கல்லூரி கனவு' என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று (ஜூலை 3) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட வேடசந்தூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காந்தி ராஜன் பேசுகையில், 'ஆங்கிலத்தைச் சரளமாக பேசுபவர்களுக்கு மட்டுமே அந்நிய நிறுவனங்களில் வேலைக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதிலும் பெண்களாக இருந்தால் அழகு முக்கியம்; அழகான பெண்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும்' என்று பேசினார். இது அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ காந்திராஜன் பேச்சு

மேலும், காந்தி ராஜனின் இப்பேச்சிற்குப் பலர் சமூக வலைதளங்களில் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

இதையும் படிங்க: நுபுர் சர்மாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்!

Last Updated : Jul 4, 2022, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details