திண்டுக்கல் மாவட்ட திமுக தலைமை அலுவலகமான கலைஞர் மாளிகையில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " குடகனாறு ஆற்றில் கன்னிமர் ஓடை பகுதியில் மூன்று பிரிவுகளாக பிரிந்து ராஜவாய்க்கால், குடகனாறு பாசன வாய்க்கால் மற்றும் காமராஜர் அணைக்கு நீர் செல்கிறது. பெரியாற்றில் வரும் தண்ணீர் குடகனாற்றில் வரவில்லை என அனுமந்தராயன் கோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் 10 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், தண்ணீர் அக்கிராமங்களுக்கு வந்து சேரவில்லை. கற்களால் அடைக்கப்பட்ட அந்த மூன்று பகுதிகளுக்கும் தண்ணீர் பிரியும் இடத்தை, சிமெண்ட் கலவையால் பொதுப்பணித்துறை அடைத்துள்ளது. பின்னர் நான் அதில் தலையிட்டு, தண்ணீர் பகிர்ந்து வழங்க பேசி முடிக்கப்பட்டு உள்ளது. அதை இன்னும் ஓரிரு நாள்களில் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தவுள்ளது.