தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம மக்களை தாக்கிய திமுக கவுன்சிலர்.. 3 பெண்கள் படுகாயம்.. நடந்தது என்ன.? - திமுக கவுன்சிலர் மீது கிராம மக்கள் புகார்

திண்டுக்கல் அருகே பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக கூறி திமுக கவுன்சிலர் மீது கிராம மக்கள் புகார் அளித்ததால், ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பெண்கள் படுகாயமடைந்தனர்.

கிராம மக்களை தாக்கிய திமுக கவுன்சிலர்
கிராம மக்களை தாக்கிய திமுக கவுன்சிலர்

By

Published : Dec 30, 2022, 5:12 PM IST

Updated : Dec 30, 2022, 7:19 PM IST

கிராம மக்களை தாக்கிய திமுக கவுன்சிலர்

திண்டுக்கல்:குப்பம்பட்டி கிராமத்தின்6ஆவது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த சின்னசாமி, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பொது இடங்களை ஆக்கிரமித்து கம்புகளை ஊன்றியதாக தெரிகிறது. இதனைக் கண்டித்து இன்று (டிச. 30) காலை வடமதுரை காவல் நிலையத்தில் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சென்று புகார் அளித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் சின்னசாமி, கிராம மக்கள் ஊர் திரும்பியதும், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் மக்களை தாக்கினார். இதில் மூன்று பெண்கள் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் மாறியது.

இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்ட மக்கள், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக கவுன்சிலர் சின்னசாமி மீது நடவடிக்கை எடுத்து பதவியை பறிக்கும் வரை அரசு மருத்துவமனையை விட்டு கலைந்து செல்லமாட்டோம் என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தொடர் பணம் பறிப்பில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது!

Last Updated : Dec 30, 2022, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details