திண்டுக்கல் : பழனி அருகே சண்முகம் பாறை என்ற கிராமத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் கள்ளச்சாராயம் காய்ச்சி பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்த ரகசிய தகவல் தாலுகா காவல் துறையினருக்கு வந்ததையடுத்து தனிப்படையினர் சண்முகம் பாறை என்ற கிராமத்திற்கு விரைந்து சென்று கள்ளச்சாராயம் பற்றி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது
இந்நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பலை அதிரடியாக தனிப்படை காவலர்கள் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 120 லிட்டர் சாராயம், 50 லிட்டர் எரிசாராயம், காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர் .
மேலும் கைது செய்த மூன்று நபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
குவாரிகள் விதிமீறல்: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை