தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் பரவியதையடுத்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி; தீவிர சோதனையில் போலீஸ்! - தீவிர சோதனையில் போலீஸ்
திண்டுக்கல்: பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இலங்கையிலிருந்து சில பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள் தற்போது கோவையில் பதுங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. சந்தேகத்திற்குரிய நபர்களை போலீசார் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.