திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்திற்கு அருகே விஸ்வநாத நகர் பகுதிக்கு செல்லும் ரயில்வே தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு அருகில் சென்னையிலிருந்து பாலக்காடு செல்லும் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்களால் பழனி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
ரயிலில் அடிபட்டு இறந்தவரின் உடல் மீட்பு - திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
ரயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத நபரின் மீட்பு
பின்னர் அங்கு வந்த ரயில்வே காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரை பற்றிய விவரங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.