தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோக்கர்ஸ் வாக்கின் குறிஞ்சி தோட்டத்தைப் பராமரிக்கக் கோரிக்கை! - coakers walk

திண்டுக்கல்: கொடைக்கானல் கோக்கர்ஸ் சுற்றுலா தலத்தில் உள்ள குறிஞ்சி மலர் தோட்டத்தைப் பராமரிக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

dindigul tourists request to maintain the kurinji garden
கோக்கர்ஸ் வாக்கின் குறிஞ்சி மலர் தோட்டத்தைப் பராமரிக்க கோரிக்கை!

By

Published : Feb 20, 2020, 8:24 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாக இருந்துவருகிறது. இங்குள்ள சுற்றுலாத் தலங்களான பில்லர் ராக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்கள் அமைந்துள்ளன.

இதில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக கோக்கர்ஸ் வாக் பகுதி உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் நடைபாதையில் நடந்து சென்று இயற்கையின் அழகை ரசிக்கும் வகையில் சுமார் 15 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குறிஞ்சித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் தோட்டம் பராமரிக்கப்படாமல் புதர்கள் மண்டி குப்பை கூலம் போல நெகிழி பாட்டில்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

எனவே அங்குவரும் சுற்றுலாப் பயணிகள் ரம்மியமான சூழலை காணாமல் ஏமாற்றமடைந்து செல்கின்றனர். எனவே குறிஞ்சி மலர் தோட்டத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என கொடைக்கானல் நகராட்சிக்கு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோக்கர்ஸ் வாக்கின் குறிஞ்சி மலர் தோட்டத்தைப் பராமரிக்க கோரிக்கை!

இதையும் படிங்க:கொடைக்கானலில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு தடை!

ABOUT THE AUTHOR

...view details