திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை மூலமாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் சிறு பாசன குளங்கள் ஊரணிகள், குப்பைகளை சீரமைக்கும் பணியினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். மேலும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களில் விவசாயிகளின் பங்களிப்புடன் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணிகளையும் ஆய்வு செய்தார்.
14 கோடி ரூபாயில் திண்டுக்கல்லில் குடிமராமத்துப்பணி! - சீனிவாசன்
திண்டுக்கல்: 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற உள்ளதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
forest minister
இந்நிகழ்ச்சியின் போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்நாட்டில் விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும், வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் உதவும் என்று தெரிவித்தார்.