திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். திண்டுக்கல்லில் இருந்து பழனி வரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் நடந்து செல்வதற்காக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதையில் இருந்த முட்கள், செடிகளை அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்யப்பட்டன.
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம் - பக்தர்களுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்காக நடைபாதையில் உள்ள தற்காலிக கடைகள், ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது.
dindigul removal of roadsideoccupation
இந்நிலையில், ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடியிலிருந்து குழந்தை வேலப்பர் கோயில் வரை உள்ள நடைபாதையில் இருந்த தற்காலிக கடைகள், ஆக்கிரமிப்புகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி அலுவலர்கள் உதவியுடன் காவல்துறையினர் அகற்றினர்.
இதையும் படிங்க: பெண் வேட்பாளர் கையை கடித்த பாமக வேட்பாளர்!