தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தைத் தாண்டிய உறவு: தாயின் அஜாக்கிரதையால் பறிபோன குழந்தையின் உயிர் - திண்டுக்கல் செய்திகள்

திண்டுக்கல்லில் ஒன்றரை வயது சிறுமி கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக ஆண் நண்பருடன் உல்லாசமாக இருக்க பெற்ற தாயே அஜாக்கிரதையாக குழந்தையை கிணற்றின் அருகில் விளையாட விட்டுவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

சிறுமி மரண வழக்கு
சிறுமி மரண வழக்கு

By

Published : Dec 2, 2022, 10:15 PM IST

திண்டுக்கல்:நிலக்கோட்டை அடுத்த சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர் துர்காதேவி. இவருக்கும் எரியோடு பகுதியைச் சேர்ந்த ராஜதுரைக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த ஓராண்டுக்கு முன் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி நிலக்கோட்டை அருகே உள்ள தனது தாய்மாமா பாலுவின் தோட்டத்திற்கு குழந்தையுடன் சென்று துர்கா தேவி தங்கியதாக கூறப்படுகிறது.

அன்று இரவு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போன நிலையில் மறுநாள் தோட்டத்து கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது. ஒன்றரை வயது சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், கிணற்றில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தாலா அல்லது வேறெதும் அசம்பாவிதங்கள் நடந்ததா என விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சிறுமியின் தாய் துர்கா தேவியிடம், போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலக்கோட்டை அடுத்த தோப்புப்பட்டியைச் சேர்ந்த அஜய் என்பவருக்கும், துர்கா தேவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், சம்பவத்தன்று அஜயுடன் உல்லாசமாக இருக்க கிணற்றின் அருகில் அஜாக்கிரதையாக ஒன்றரை வயது குழந்தையைப் பரிதவிக்க விட்டுவிட்டு சென்றதாகவும் துர்கா தேவி தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

கிணற்றின் அருகில் இறக்கிவிடப்பட்ட சிறுமி தவறி விழுந்து இருக்கலாம் எனத் தெரிவித்த போலீசார், துர்காதேவி மற்றும் ஆண் நண்பர் அஜய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் நண்பருடன் தகாத உறவுக்குச் செல்ல தடையாக இருந்த குழந்தையை பரிதவிக்கவிட்டு தாய் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தைத் தாண்டிய உறவு: தாயின் அஜாக்கிரதையால் பறிபோன குழந்தையின் உயிர்

இதையும் படிங்க:வத்தலக்குண்டில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய பஸ்: சிசிடிவி வைரல்!

ABOUT THE AUTHOR

...view details