மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பல்வேறு விதமாக மகளிர் தினத்தை முன்னெடுத்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற மருத்துவ மாணவிகள், தற்போது மருத்துவராகிய பின்னர் மகளிர் தினத்தை கொண்டாடும் நோக்கில் சந்தித்தனர்.
மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்தச் சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சென்னை கீழ்பாக்கம் (கே.எம்.சி) மருத்துவக் கல்லூரியில் 1970ஆம் ஆண்டு பயின்று கல்லூரி வாழ்க்கையை நிறைவு செய்த முன்னாள் மாணவிகளான இந்நாள் முதுநிலை மருத்துவர்களின் சந்திப்பு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது தங்கள் உடன் பயின்ற சக தோழிகளைக் காண்பதற்காக வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மருத்துவத் துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டு, தங்களின் கல்லூரி காலநினைவுகளை ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு குறித்து நம்மிடையே பேசிய கண் மருத்துவர் பிரேமா, 'இந்த மகளிர் தினம் எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு மகளிர் தினம். நாங்கள் அனைவரும் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கல்லூரி வாழ்வினை முடித்து 50ஆவது பொன்விழா ஆண்டு (GOLDEN JUBLEE) இன்றுடன் நிறைவடைந்தாலும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது கல்லூரி காலத்தின் நினைவுகளை நினைவூட்டியது மறக்கமுடியாத அனுபவம்' என்றார். மேலும் அவர் , ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட பிற உதவிகள் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
96 பட பாணியில் நிகழ்ந்த பெண் மருத்துவர்கள் சந்திப்பு! இதையும் படிங்க:மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு கடன் உதவி