திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த தம்பதியின் இளைய மகள் வனிதா (பெயர் மாற்றப்பட்டள்ளது). வனிதா நேற்று மாலை ஊருக்கு அருகே உள்ள தோட்டத்து பகுதியில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதைப் பார்த்த அவரது பெற்றோர்கள், அக்கம்பக்கத்தினர் வனிதாவை தூக்கிக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அப்போது வனிதாவை பரிசோதனைசெய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், சிறுமியின் உடலில் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான தடயங்கள் இருப்பதாகவும் கூறினர். இதைத் தொடர்ந்து சிறுமியின் உடலானது திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமைசெய்து கொலை தற்போது காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் சம்பவம் நடந்த ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு காவலர்கள் சென்று தோட்டத்து பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வேடசந்தூர் அருகே சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது