உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்தும் மக்கள் காய்கறி, மளிகை பொருள்கள், மருந்து மாத்திரைகள் வாங்க வேண்டும் என காரணம் கூறி சகஜமாக சுற்றித்திரிகின்றனர்.
காவல் துறையினரும் முடிந்தவரை மக்களை எச்சரித்தும், அறிவுரைகளையும் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து காவல் துறை சார்பில் வெள்ளை விநாயகர் கோயில் அருகே ராட்சத கரோனா வைரஸ் பொம்மையை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மை அருகே "நான் வரமாட்டேன் என் இடத்திற்கு நீ வந்தால் விடமாட்டேன" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
திண்டுக்கல் ராட்சத கரோனா வைரஸ் பொம்மை இதைப் பார்வையிட்ட மக்களிடம் கரோனா வைரஸின் பாதிப்பு குறித்தும், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனவும் காவல் துறையினர் விளக்கினர்.
இதையும் படிங்க:’என்னிடம் நெருங்கினால் கட்டிப்பிடித்து விடுவேன்’ - மருத்துவர்களை மிரட்டிய கரோனா நோயாளி