தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு - திண்டுக்கல் ஆட்சியர்! - திண்டுக்கல்

திண்டுக்கல்: மக்களவைத் தேர்தல், நிலக்கோட்டை சட்டபேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் பயன்படுத்திய வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு - திண்டுக்கல் ஆட்சியர்

By

Published : May 20, 2019, 9:15 PM IST

இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மாவட்ட ஆட்சியர் வினய், "திண்டுக்கல் - பழனி சாலையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் உள்ளன. 24 மணி நேரத்திற்கும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் சுழற்சி முறையில் 274 அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 23ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும்போது ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்படும். அவை அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். இப்பணிகளில், மொத்தம் 535 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு - திண்டுக்கல் ஆட்சியர்

மேலும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதி, நிலக்கோட்டை சட்டபேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கப்படும். அதற்கு முன்னதாக தபால் ஓட்டுகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம் என ஆறு தொகுதிகளுக்கும் நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி என வாக்கு எண்ணிக்கைக்காகமொத்தம் ஏழு அறைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில், மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் வெற்றி பெற்ற வேட்பாளரை அறிவிக்க இரவு நேரம் ஆகக் கூடும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details