தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காமராஜர் யார்? மற்றவர்கள் யாரென? மக்களுக்கு தெரியும் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு..

Ex Minister Dindigul Sreenivasan: சமீபத்தில், கர்மவீரர் காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதாகக் கூறப்படும் நிலையில், 'காமராஜர் யார்..? மற்றவர்கள் யார்..? என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரிந்ததே.. இதுகுறித்து நான் கூற வேண்டிய அவசியம் இல்லை' என முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 5:23 PM IST

காமராஜர் யார்? மற்றவர்கள் யாரென? மக்களுக்கு தெரியும் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு..

திண்டுக்கல்:திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குட்டியபட்டியில் ரூ 38 லட்சம் செலவில் புதிதாகத் தார்ச் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (ஜன.13) நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரகப்பிரவேச வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு சாப்பாடு சரியில்லை எனக் கூறுவதுபோல் என்டிஏ கூட்டணியில் 9 வருடங்கள் இருந்துவிட்டு வெளியே வந்ததாக பாஜக அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு, அவருடைய கட்சியின் கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்; நாங்கள் ஏன் வெளியே வந்தோம் என்பதை எடப்பாடி பழனிசாமி தெளிவாகத் தெரிவித்து இருக்கிறார். திருப்பித் திருப்பி கூற வேண்டிய அவசியம் கிடையாது. ஏன் வெளியே வந்தோம் என தமிழக மக்களுக்கும் அதிமுகவினருக்கும் நன்றாகத் தெரியும்' என்று பதிலளித்துள்ளார்.

அப்போது கர்மவீரர் காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது குறித்து எழுப்பிய கேள்விக்கு, 'காமராஜர் யார்..? மற்றவர்கள் யார்..? என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். இதுகுறித்து நான் கூற வேண்டிய அவசியம் இல்லை' எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், 'அயோத்தி கோயில் திறப்பு விழாவிற்கு அதிமுகவுக்கு அழைப்பிதழ் வந்துள்ளது என்பது உண்மைதான். விழாவிற்குச் செல்வது குறித்து சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்யப்படும்' என்றார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவிற்கும் இடையே தான் கடுமையான போட்டி உள்ளது என அண்ணாமலை கூறியது குறித்துக் கேட்ட கேள்விக்கு, 'ஓட்டு எண்ணும் பொழுது தான், எந்த கட்சி எங்கங்கே உள்ளது என்பது தெரியவரும். கூட்டணிக்கான கதவு திறந்துதான் உள்ளது என அண்ணாமலை கூறியது குறித்த கேட்ட கேள்விக்கு, 'அவர் யாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது தெரியாது. நாங்கள் பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்து விட்டோம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் நிறுத்தம்? - இருக்கும் சலுகைகளை திமுக பறிப்பதாக ஓபிஎஸ் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details