தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோட்டத்தில் காவலுக்கு இருந்த 2 பெண்களுக்கு கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு! - dinigul crime news

திண்டுக்கல்: சிறுமலை அருகே தோட்டத்தில் காவலுக்கு இருந்த இரண்டு பெண்களை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

lady got attacked
lady got attacked

By

Published : Aug 8, 2020, 7:19 PM IST

Updated : Aug 8, 2020, 10:15 PM IST

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அருகே தென்மலை கருப்பர் கோயில் செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் ராஜலட்சுமி (45), சாந்தா (47) ஆகிய இரண்டு பெண்கள் கூலி வேலை செய்து வந்துள்ளனர். அத்தோட்டத்தின் அருகே குடிசையில் வசித்துவரும் இவர்கள் இரவு காவலுக்கு ஒன்றாக தோட்டத்தில் இருப்பது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் இருவரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் இருவரும் அலறியதில் அருகில் இருந்த ராஜலட்சுமியின் மகள், மகன், மருமகன் ஆகியோர் ஓடிவந்து பார்த்தபோது, ராஜலட்சுமியும், சாந்தாவும் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளனர்.

உடனடியாக ராஜலட்சுமி குடும்பத்தினர் அவர்களை அங்கிருந்து திண்டுக்கல் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். இதனிடையே ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் இருந்த சாந்தா பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமலை பகுதியில் அதிகப்படியான தோட்டங்கள் இருக்கின்ற நிலையில், இங்குள்ள பெண் தொழிலாளர்கள் தாக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Aug 8, 2020, 10:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details