தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருபதாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய மூதாட்டி! - தமிழ் செய்திகள்

கரோனா நிவாரண நிதிக்காகப் பழனியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தாசில்தாரிடம் 20 ஆயிரம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார்.

நிவாரணம் வழங்கிய மூதாட்டி
நிவாரணம் வழங்கிய மூதாட்டி

By

Published : May 21, 2021, 12:58 PM IST

திண்டுக்கல்: ஓய்வூதியம் பெற்று வரும் மூதாட்டி ஒருவர், ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தற்போது கரோனா அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண நிதி வழங்கக் கேட்டுக் கொண்டார். இதற்காக பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.

பழனி சண்முகபுரத்தில் வசித்து வந்தவர் கல்லூரி கல்வித்துறை முன்னாள் துணை இயக்குனர் பாலச்சந்திரன். இவர் பணி ஓய்வு பெற்று இறந்து விட்டார். இவரது மனைவி சுந்தரி (78), தற்போது குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகிறார்.

இச்சூழ்நிலையில், முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக, இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலையை பழனி தாசில்தார் வடிவேல் முருகனிடம் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தாசில்தார் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: மூதாட்டியின் உயிர் காக்கப் போராடிய இளம்பெண்ணை பாராட்டிய ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details