தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆக்கிரமிப்பை எடுத்தால் தலை இருக்காது' - விஏஓவுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ! - threat to VAO

திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆக்கிரமிப்பை அகற்றிய விஏஒ-வுக்கு கொலை மிரட்டல்
ஆக்கிரமிப்பை அகற்றிய விஏஒ-வுக்கு கொலை மிரட்டல்

By

Published : Nov 16, 2022, 6:51 PM IST

திண்டுக்கல்: நத்தம் தொகுதிக்குட்பட்ட சாணார்பட்டி அருகே உள்ளது மார்க்கம்பட்டி கிராமம். இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் வாய்க்கால் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு(VAO) புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் உதவியோடு ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த மார்க்கம்பட்டியை சேர்ந்த திருப்பதி, செல்வம், மூர்த்தி ஆகிய மூன்றுபேரும் ’எப்படி ஆக்கிரமிப்பை எடுத்தீர்கள், உங்கள் தலையை வெட்டிவிடுவேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பை அகற்றிய விஏஒ-வுக்கு கொலை மிரட்டல்

இந்த மிரட்டல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:Goat-களுக்கு ரெயின் கோட் - தஞ்சாவூர் விவசாயி அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details