தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் தொடர் மழை: பாலம் இடிந்து விழுந்ததில் கார்கள் சேதம் - பாலம் இடிந்து விழுந்ததில் கார்கள் சேதம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக ஆனந்தகிரி பகுதியில் பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதமானது.

kodaikanal
kodaikanal

By

Published : May 7, 2021, 10:46 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் அருகில் இருந்த கார்கள் முற்றிலும் சேதமானது. மேலும் மழைநீர் ஐந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அங்கு வசித்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர், இடிந்து விழுந்த பாலத்தில் மதகுகள், சேதமான தாங்கு சுவர்களை உடனடியாக சீரமைத்தனர். இதனால் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டது. வீட்டிற்குள் புகுந்த மழைநீர், சாக்கடை நீரை நகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details