தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பேத்கர் சிலை உடைப்பு; செப் 3ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்! - சென்னை

திண்டுக்கல்: அம்பேத்கர் சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது தலைமையில் சென்னையில் செப்டம்பர் 3ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் கூறியுள்ளார்.

thirumavalavan

By

Published : Aug 28, 2019, 10:03 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திப்பட்டியில் விசிக கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் அக்கட்சி தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு பயணம் செய்து தொழில் முதலீட்டாளர்களை தமிழ்நாடு நோக்கி கொண்டு வருவது எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா ஸ்ரீசிட்டி நகருக்கு சென்றுவிட்டன.

செப் 3ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

ப.சிதம்பரத்தை கைது செய்தது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அவர் மீது எஃப்.ஐ.ஆர் இல்லை, குற்றப் பத்திரிகை இல்லை, ஏற்கனவே சி.பி.ஐ விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார். அதையெல்லாம் மீறி சுவர் ஏறி குதித்து கைது செய்வது என்பது திட்டமிட்ட பழிவாங்கும் உள்நோக்கம் என தெரிகிறது.

நாகை மாவட்டம் வேதராண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த பிறகு அரசு சார்பில் சிமெண்ட் சிலை வைத்துள்ளது. இதற்கு பதிலாக வெண்கல சிலை வைக்க வேண்டும். இந்த சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது தலைமையில் சென்னையில் செப்டம்பர் 3ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details