தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாஜக நிறைவேற்றிய 32 சட்டங்களும் மக்களின் உரிமையை பறிக்கும் சட்டங்களே!' - communist party members protest

திண்டுக்கல்: இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய 32 சட்டங்களும் மக்களின் நலன், உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களே என கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. சு. வெங்கடேசன் பேசியுள்ளார்.

சு.வெங்கடேசன்

By

Published : Oct 16, 2019, 11:19 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து இடதுசாரி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதி அருகே நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலைக் கட்சியை சார்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

இதில் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசுகையில், "மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்னர் ஒரு கடிதம் எனக்குக் கிடைத்தது. அதில் இந்திய நாடாளுமன்ற கட்டடத்தை இடிப்பது குறித்த கருத்தை ஒரு வாரத்திற்குள் அனுப்பும்படி கூறப்பட்டிருந்தது.

உண்மையில் மத்திய அரசு நாடாளுமன்ற கட்டடத்தை மட்டும் இடிப்பதற்கு நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட சமூக அமைப்பையும் இடிக்க எண்ணுகிறது. இரண்டாம் முறை ஆட்சியில் அமர்ந்த பாஜக அரசு அகோரமான திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

பாஜக அரசு நிறைவேற்றிய 32 சட்டங்களும் நமது நலன், உரிமை சார்ந்த விஷயங்களைப் பறிப்பதாகும். அதிலும் அதன் மையப்புள்ளியாக மூன்றும் உள்ளன. அவை மாநில உரிமை, சிறுபான்மை மக்களின் உரிமை, தங்களுக்கு எதிராக கருத்துக் கூற முற்படுபவர்களின் கருத்துரிமையைத் தகர்த்துவருகிறது.

சு. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு

மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மத்திய அரசின் அதிகாரங்கள் செயல்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பால்வாடி முதல் பல்கலைக்கழகம்வரை நாம் எதைப் படிப்பது என்ற பாடத்திட்டத்தை மோடி அரசுதான் முடிவுசெய்யும். இதனால் மாநில கல்வி அமைச்சர்கள் ரப்பர் ஸ்டாம்ப் போலதான் இருக்க முடியும்.

தற்போதுள்ள சூழலில் நாட்டின் பொருளாதார சூழல் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர். ஆனால் அது குறித்து இந்த அரசு எந்தக் கவலையும் கொள்ளவில்லை. மேலும் நம்முடைய பொருளாதார நிலை இதுதான் என்று ஏற்றுக்கொள்ளக்கூட இந்த அரசு துணியவில்லை. மாறாக பொதுத் துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து வருகிறது. இதனால் நம் நாடு கார்ப்பரேட்டுகள் சூறையாடும் களமாக மாறியுள்ளது" என பேசினார்.

இதையும் படிக்கலாமே: ராமதாஸுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த தருமபுரி திமுக எம்.பி.!

ABOUT THE AUTHOR

...view details