திண்டுக்கல்: கூம்பூர் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் ஆகியோர் மதியவேளையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியாக வந்த ஏலக்காய் மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரிடம், 'யூனிஃபார்ம் சரியாக அணியவில்லை. வந்து கவனித்துவிட்டு செல்' என காவலர் கூறியுள்ளார்.
இதற்கு வாகன ஓட்டி 'தன்னிடம் அனைத்து வாகனச் சான்றுகளும் சரியாக உள்ளது' எனக் கூறவே ஆத்திரமடைந்த காவலர் ‘ஏய்’ எனக்கூறியவுடன் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் ‘நான் உங்களிடம் ஆடு, மாடு மேய்கிறோமா? அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளன. நீங்கள் வாகனத்தை நிறுத்தச்சொன்னீர்கள். நிறுத்திவிட்டு இறங்கி வந்து பதில் அளிக்கிறோம். அது இது என கேள்வி கேட்கிறீர்கள்’ என தன்னை மரியாதை இன்றி பேசிய காவலரிடம் பொங்கி எழுந்துள்ளார்.
இதனால் கடுப்பான உதவி ஆய்வாளர் ஓட்டுநரிடம் 'ஓவராக சட்டம் பேசுகிறாயா?. உடனடியாக இங்கிருந்து சென்றுவிடு' எனக்கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இவற்றை சரக்கு வாகனத்தில் வந்தவர் வீடியோ எடுப்பதைப்பார்த்து காவலரும் தங்கள் மாட்டிக்கொள்வோம் என பயந்து அவரும் அங்கு நடப்பதை வீடியோ எடுத்துள்ளார்.