தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளான இன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமமுக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், அங்கிருந்த ஒலிபெருக்கியில் எம்ஜிஆர் குறித்தும் அமமுக ஆட்சி சாதனைகள் குறித்தும் பேச தொடங்கினர்.
அப்போது, அங்கு வந்த அதிமுகவினர், தாங்கள் ஏற்பாடு செய்த ஒலிபெருக்கியை அமமுகவினர் எவ்வாறு பயன்படுத்தலாம் எனக் கூறி அமமுக தொண்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய தொண்டர்கள் அதன் பின்னர் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் மேயரும் மாவட்ட செயலாளருமான மருதராஜ், அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அதிமுக கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா: அதிமுகவினர் மரியாதை