திண்டுக்கல் மாவட்டம் அய்யாபட்டி சாலையில் இரவு நேரத்தில் பேக்கிங் செய்யப்பட்ட தின்பண்டங்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொட்டிச் செல்கின்றனர். இது தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனால் அய்யாபட்டி சாலையில் செல்லும் சிறுவர்கள், சிறுமிகள் திண்பண்டங்களை எடுத்துச் செல்கின்றனர். திண்பண்டங்கள் காலாவதியானதா? என்பது தெரியவில்லை.
சாலையோரத்தில் கிடக்கும் திண்பண்டங்கள் இதனால் சிறுவர்கள், சிறுமிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே திண்பண்டங்களை கொட்டி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆசை, ஆசையாய் வாங்கும் திண்பண்டங்களில் குவிந்துள்ள ஆபத்துகள்'