சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், திண்டுக்கல்- கரூர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
இது குறித்து கடையின் உரிமையாளர் முத்துகுமார் கூறுகையில் ‘’நாங்கள் ஆறு மாதத்திற்கு முன்பு இந்த உணவகத்தை திறந்தோம். உழைக்கும் பெண்களை கெளரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். இதற்கு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.