தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் அனுமதியின்றி கூடாரம் அமைத்த 20 பேர் மீது வழக்கு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் அனுமதியின்றி கூடாரம் அமைத்ததாகக் கூறி 20 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கூடாரம் அமைத்த 20 பேர் மீது வழக்கு
கூடாரம் அமைத்த 20 பேர் மீது வழக்கு

By

Published : Aug 10, 2021, 6:24 AM IST

திண்டுக்கல்: கரோனா தளர்வுகளுக்குப் பிறகு கொடைக்கானலுக்கு தற்போது அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலும் தற்போது பல்வேறு மலை கிராமங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த சில நாள்களாகவே அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு ஏதுவாகக் கூடாரங்களை அமைத்து, அங்கு தங்கிவருகின்றனர். மேலும், தங்கக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை எனவும் வன விலங்குகளால் அவர்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதனடிப்படையில் பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்துக்குத் தொடர்ந்து வந்துள்ளன. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 9) அதிரடியாக கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் ஆய்வுமேற்கொண்ட அலுவலர்கள் அந்தப் பகுதியில் இருந்த கூடாரங்களைப் பறிமுதல்செய்தனர்.

ஆட்சியர் எச்சரிக்கை

மேலும் கூடாரங்கள் அமைத்துத் தந்தவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களிடமிருந்து 60 கூடாரங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

கூடாரம் அமைத்த 20 பேர் மீது வழக்கு

தொடர்ந்து மலைப்பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கக் கூடாது எனவும் மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: குடும்பத்துடன் சுற்றுலா அனுப்புவதாக கூறி ஒரு லட்சத்து 30 ஆயிரம் மோசடி!

ABOUT THE AUTHOR

...view details