தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் - இருசக்கர வாகனம் மோதல் - இருவர் பலி - இருசக்கர வாகனம்

திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி மதுரை-வத்தலக்குண்டு சாலையில் கார், இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நேருக்கு நேர் மோதிய விபத்தில்
நேருக்கு நேர் மோதிய விபத்தில்

By

Published : Nov 8, 2021, 10:42 AM IST

திண்டுக்கல்:மதுரை பெருங்குடியைச் சேர்ந்த காமராஜ் (20), அஜித் கண்ணன் (20) ஆகியோர் நண்பர்களுடன் இணைந்து தீபாவளி விடுமுறையைக் கொடைக்கானலில் கழித்துவிட்டு இன்று(நவ.07) வீடு திரும்பி கொண்டிருந்தனர். கொடைக்கானலிலிருந்து இருசக்கர வாகனத்தில் அசுர வேகத்தில் வந்துள்ளனர்.

அப்பொழுது, நிலக்கோட்டையை அடுத்த சிவன் கோயில் அருகே சென்றபோது, சிவகங்கையிலிருந்து பண்ணைக்காடு நோக்கி எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து

இதில் காமராஜ் தூக்கி எறியப்பட்டு பலியானார். அவரது உடல் மின்கம்பியில் தொங்கியது. அஜித் கண்ணன் சாலையிலேயே தலை சிதறி பலியானார். தகவலறிந்த நிலக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தாம்பரம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் அவதி

ABOUT THE AUTHOR

...view details