மதுரை மாவட்டம், சேக்கிபட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (50) போஸ்ட் மாஸ்டராக சேக்கிபட்டி கிளை தபால் அலுவலகத்தில் பணியாற்றினார்.
வாகன விபத்து - தந்தை மகன் உயிரிழப்பு - நத்தம்
திண்டுக்கல்:நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகன் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
தந்தை மகன் உயிரிழப்பு
இவரது மகன் ஜெய் ஸ்ரீராம் கணேஷ் 14, தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார்.இவர்கள் நத்தத்திலிருந்து- சேக்கிபட்டி செல்லும் வழியில் ஏரக்காய்பட்டி அருகே பின்புறம் இருந்து வந்த கார் மோதியது.
இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட தந்தை, மகன் இருவரும் படுகாயம் அடைந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.