தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் ஏரிச்சாலையில் விரைவில் கேமரா பொருத்தும் பணிகள் தொடக்கம்

சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும்விதமாக, கொடைக்கானல் ஏரிச்சாலையில் இருசக்கர வாகன பந்தயம் விடுவதைக் கண்காணிக்க விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 18, 2021, 6:31 AM IST

காவலர்களுக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பான காணொலி
காவலர்களுக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பான காணொலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேற்று (ஆகஸ்ட் 17) கொடைக்கானல் பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆய்வுக்குப் பின்னர் அவர் பேசுகையில், "சமீப காலமாக சட்டவிரோதமான சுற்றுலா கூடாரங்கள் மலைப்பகுதிகளில் பெருகியது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களின் விற்பனையையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

காவலர்களுக்குச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான காணொலி

கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை

தற்போது சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலையில் நடைபயிற்சி, மிதிவண்டி சவாரி, குதிரை சவாரி ஆகிவற்றை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் பந்தயங்களில் ஈடுபடும் இருசக்கர வாகன ஓட்டிகளால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சைக்கிள் சவாரி செல்லும் பெண் சுற்றுலாப் பயணிகள்

இதற்காக ஏரிச்சாலை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படும்” என்றார். பின்னர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஐந்து காவலர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க:கொடைக்கானலில் பெய்த கனமழை

ABOUT THE AUTHOR

...view details