தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் முட்டைக்கோஸ் விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை! - Cabbage

கொடைக்கானல் மலைப்பகுதியில் முட்டைக்கோஸ் விலை கடும் வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளது.

முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி:கிலோ ரூ.5க்கு கொள்முதல்
முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி:கிலோ ரூ.5க்கு கொள்முதல்

By

Published : Feb 4, 2023, 6:12 PM IST

முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி:கிலோ ரூ.5க்கு கொள்முதல்

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக் கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மேல்மலை மற்றும் கீழ் மலை ஆகிய கிராமப் பகுதிகளில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்கள் அனைத்துமே விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வரக்கூடிய நிலையில் மலை காய்கறிகள் திடீர் உச்சம் தொட்டும் திடீர் விலை குறைவும் இருந்து வருகிறது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் தற்போது அதிக அளவில் முட்டைக்கோஸ் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். முட்டைக்கோஸ் சந்தைகளில் அதிகம் விற்கக்கூடிய காய்கறி ஆகும். இந்நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து வரும் முட்டைக்கோஸ் அதிகரிப்பால் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையக்கூடிய முட்டைக்கோஸின் விலை திடீரென்று குறைந்துள்ளது.

கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாய் முதல் ஏழு ரூபாய் வரை மட்டுமே முட்டைக்கோஸ் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கொடைக்கானல் மலைக் கிராம விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள ஒழுங்குமுறை விற்பனை கொடுத்து அமைத்துத் தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:சொந்த குடிமக்களை அரசே சுரண்டுவதைப் போல் உள்ளது : சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details