தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிஎஸ்என்எல் குழுமத்திற்கு 4ஜி உரிமை வழங்காதது அநீதி: பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிருப்தி! - கர்நாடகா மக்களவை உறுப்பினர் ஆனந்தகுமார் ஹெக்டே

திண்டுக்கல்: கர்நாடக மக்களவை உறுப்பினர் ஆனந்தகுமார் ஹெக்டேயைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் ஊழியர்கள்
பிஎஸ்என்எல் ஊழியர்கள்

By

Published : Aug 13, 2020, 4:40 PM IST

கர்நாடக மாநில பாஜக மக்களவை உறுப்பினர் ஆனந்தகுமார் ஹெக்டே, பாஜக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது பிஎஸ்என்எல் ஊழியர்கள் தேசத் துரோகிகள். இதன் காரணமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 85 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேசினார்.
இவரது இந்த பேச்சை பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்த்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் பழனி சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, என்.எப்.டி.இ சங்கத்தின் கிளை செயலாளர் அருளானந்தம் தலைமை வகித்தார்.
தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் குழுமத்திற்கு 4ஜி அலைகற்றை உரிமத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், தனியார் நிறுவனங்களுக்கு 4ஜி சேவை வழங்கி பல ஆண்டுகள் ஆகியும் அரசு எந்திரமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி இணைய சேவை வழங்கப்படாமல் இருப்பது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கூறினர்.

ABOUT THE AUTHOR

...view details