திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் உள்ள வாணி விலாஸ் மேடு அருகே கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுகள் வெளியேறி வருகின்றன. ஏற்கனவே நகரின் மையப்பகுதியில் குடியிருப்புகள், கடைகள் அதிகமுள்ள சாலையில் திறந்தவெளியில் கழிவுநீர் குழாய் இருப்பதால், அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு கடும் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கழிவுநீர் குழாயில் உடைப்பு - பொதுமக்கள் அவதி
திண்டுக்கல்: கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிகளவான கழிவுகள் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு, தொற்று நோய் ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கழிவுநீர் குழாயில் உடைப்பு - மக்கள் அவதி
இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறிகையில்,
குழாயில் உடைப்பு கழிவுநீர் வெளியேறுவதால் கடும் துர்நாற்றும் வீசுவதுடன், உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதற்கு, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.