பீகார் மாநிலம் மேற்கு செம்பரான் அருகே வசித்துவந்த 15 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போனார். இதுகுறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காணாமல் போன சிறுமி தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள ஒருவரிடம் விலைக்கு விற்கப்பட்டதாகத் தகவல் தெரியவந்தது.
பீகார் கொத்தடிமை சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு! - சிறுமி
திண்டுக்கல்: கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த வட மாநில சிறுமி அவரின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள தொழிற்பேட்டை ஒன்றில் சிறுமி ஒருவர் கொத்தடிமையாக இருந்தது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பீகார் சிறுமி அங்கு இருப்பது தெரிந்தது. இதனையடுத்து தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் அச்சிறுமி மீட்கப்பட்டார்.
பின்னர், பீகார் மாநில போலீசார் உதவியோடு சிறுமி அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.