தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறந்த தாய் யானையைச் சுற்றிவந்த கன்று - இறந்த தாய் யானையை சுற்றி வந்த குட்டியானை

திண்டுக்கல்: பழனி அருகே பெண் காட்டு யானை உயிரிழந்ததையடுத்து அதன் அருகே யானைக்கன்று சுற்றிவந்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

elephant death
elephant death

By

Published : Apr 27, 2021, 7:04 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்துவருகின்றன. இந்நிலையில் பழனியை அடுத்துள்ள பாலாறு-பொருந்தலாறு அணையை ஒட்டியுள்ள ஜீரோ பாயின்ட் வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத் துறையினர் இறந்துகிடந்த யானையைப் பரிசோதனை செய்ததில் பெண் யானை என்று தெரியவந்தது.

மேலும் இறந்து கிடந்த பெண் யானையின் உடலின் அருகே மூன்று மாத யானைக்கன்று ஒன்று சுற்றிச் சுற்றி வந்தது. இந்நிலையில், கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையை உடற்கூராய்வு செய்தனர்.

அப்போது யானை இறந்து மூன்று நாள்களுக்கும் மேலாகி இருக்கலாம் எனத் தெரியவந்தது. இறந்த யானை அந்த யானைக்கன்றின் தாய் என வனத் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து யானையின் உடலை வனப் பகுதியிலேயே புதைத்தனர். யானையின் இறப்பு குறித்து வனத் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details