திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாங்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து வெளிமாநிலங்களில் டன் கணக்கில் மாங்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
திண்டுக்கல்லில் மாங்காய் வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்! - AWARENESS
திண்டுக்கல்: நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதியில் மாங்காய் வியாபாரத்திற்கு, மாங்காயை இயற்கை முறையில் பழுக்க வைப்பது குறித்த வழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் மாங்காய் வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்!
இந்நிலையில் நத்தம் அருகே வேம்பார்பட்டியில் உள்ள தனியார் மாங்காய் குடோனில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மாங்காய் வியாபாரிகளுக்கு இயற்கை வழியில் பழுக்க வைக்கும் முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் மாங்காய் வணிகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.