திண்டுக்கல்:கொடைரோடு பஸ் நிலையம் எதிரே ஆட்டோ ஸ்டாண்டில், இரு ஆட்டோ ஓட்டுநர்கள் குடி போதையில் அரை நிர்வாணமாக ஒருவரையொருவர் கொலைவெறியுடன் தாக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது, ஏதேனும் கொலை நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், அப்பகுதி மக்கள் பீதியில் பயந்து, அலறி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த அம்மைநாயக்கனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த சண்டையில் ஈடுபட்டது, உச்சணம்பட்டியைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் பால்பாண்டியும், பொம்மனம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகராஜா என்பவரும் தான் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. பட்டப்பகலில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்கள் கட்டிப்புரண்டு கொலை வெறியுடன் தாக்கிக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.