திண்டுக்கல்: தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் முக்கியச் சுற்றுலாத்தலம் இருந்துவருகிறது. கொடைக்கானலுக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைதருவார்கள்.
இந்நிலையில், இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களைக் கண்டு ரசித்து சில பல நாள்கள் தங்கிச் செல்வர்கள். தற்போது கொடைக்கானலில் தங்குவதற்கு புதுவிதமாக டென்ட் கலாசாரம் அதிகரித்துள்ளது.
உயிருக்கும் ஆபத்து
இந்த டென்ட் அமைப்பதில் இருக்கும் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்கின்றனர். பட்டா நிலங்கள், வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் டென்ட் அமைப்பதால் வனவிலங்குகளின் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழலும் இருந்துவருகிறது.
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 22) செய்தியாளரைச் சந்தித்த கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன், "தமிழ்நாடு அரசால் கொடைக்கானல் மலைப்பகுதியில் டென்ட் அமைப்பதற்குத் தடையானது இருந்துவரும் சூழலில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் தங்கும் விடுதிகள் நடத்துவோர் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரங்கள் செய்துவருகின்றனர்.