தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆஞ்சநேயருக்கு பழங்களினால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை!

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூர் அருகே சீத்தமர நால்ரோடு என்ற இடத்தில் உள்ள 51அடி கொண்ட ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாத மூன்றாவது வார சனிக்கிழமையான இன்று(அக் .3) 30 வகையான பழங்களில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

சிறப்பு பூஜை
சிறப்பு பூஜை

By

Published : Oct 3, 2020, 10:11 PM IST

திண்டுக்கல்: புரட்டாசி மூன்றாம் வார சனிக்கிழமையான இன்று (அக் .3) சுமார் 1000 கிலோ பழங்கள் அலங்காரத்துடன் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சீத்தமர நால்ரோடு என்ற இடத்தில் ஸ்ரீசீதா ஸ்ரீகல்யாணராம லட்சுமன 51அடி கொண்ட ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது.

இத்திருக்கோயிலில் மூலவராக கன்னிமூல கணபதியும், பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ பக்த ஆஞ்சநேயரும் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலின் சிறப்பு அம்சமாக 51 அடி உயரத்தில் மூலஸ்தானத்திற்கு மேல் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிறப்பு பூஜை

இங்கு சிறப்பு நிகழ்ச்சிகளாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அமாவாசை, பெளர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடை பெற்று வருகின்றன.

இக்கோயிலில் தொழில் தடை, திருமண தடை, குழந்தை பாக்கியம் ஆகிய தடைகள் நீங்கி செல்வச் செழிப்பாக இருக்க பால், வெண்ணை காப்பு, துளசிமாலை, வடைமாலை போன்றவைகளை நேர்த்திக்கடனாக பக்தர்கள் சமர்ப்பிப்பது வழக்கம்.

இந்நிலையில் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் வாரம் சனிக்கிழமையான இன்று(அக் .3) மதுவர்க்க அலங்காரம் ஆப்பிள், ஆரஞ்ச், கொய்யா, நெல்லிக்காய், பப்பாளி உள்ளிட்ட 30 வகையான பழங்களில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முன்பெல்லாம் இங்கு தமிழ்நாட்டில் உள்ள பக்தர்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்தது.

தற்போது கரோனா காலம் என்பதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பக்தர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை ரூ. 5.25 காசுகளுக்கு விற்பனை

ABOUT THE AUTHOR

...view details