தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் அருகே பகீர் சம்பவம் - பழைய இரும்பு வியாபாரி வெட்டிப்படுகொலை! - கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல் அருகே வீரக்கல் அடுத்து பழைய இரும்பு வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே பகீர் சம்பவம்-பழைய இரும்பு வியாபாரியை வெட்டி படுகொலை!!!
திண்டுக்கல் அருகே பகீர் சம்பவம்-பழைய இரும்பு வியாபாரியை வெட்டி படுகொலை!!!

By

Published : Oct 28, 2022, 10:28 PM IST

திண்டுக்கல்: வீரக்கல் அருகே தெற்கு மேட்டுப்பட்டி பகுதியைச்சேர்ந்தவர், சின்னத்துரை (60). இவருக்கு கலையரசி (56) என்ற மனைவியும், கனகராஜ் என்ற மகனும், நாகஜோதி என்ற மகளும் உள்ளனர்.

கனகராஜ் திருப்பூரில் உள்ளார். நாகஜோதி திண்டுக்கல்லில் குடியிருந்து வருகிறார். பழைய இரும்பு மற்றும் பித்தளைப்பாத்திரங்களை கிராமம் கிராமமாக சென்று வியாபாரம் செய்து வரும், சின்னத்துரை தெற்கு மேட்டுப்பட்டியில் தனது மனைவி கலையரசியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தெற்கு மேட்டுப்பட்டியில் இரண்டு பேர் சின்னத்துரையிடம் தகராறில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் சின்னத்துரை வீட்டிற்குச்சென்றபோது அவரைப் பின் தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் சின்னத்துரை வீட்டு அருகே அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் கழுத்து, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு சின்னத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி போலீசார் சின்னத்துரை உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு, சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. கொலையாளிகளைப்பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து கொலையாளிகளைத்தேடி வருகின்றனர்.

மேலும் தெற்கு மேட்டுப்பட்டியில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து கொலையாளிகள் யார் என அடையாளம் காண போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:தேனி அருகே சொத்துத்தகராறில் கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை!

ABOUT THE AUTHOR

...view details