உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதுடைய பட்டியலின பெண் கடந்த மாதம் 14ஆம் தேதி நான்கு பேரால் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அப்பெண் 29ஆம் தேதி உயிரிழந்தார்.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 5 கோடி வழங்க கோரிக்கை - Ambedkar people's party
திண்டுக்கல்: ஹத்ராஸ் பெண் படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 5 கோடி வழங்க கோரி அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து தேசிய தலைவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மனு அளித்தனர். மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: உபி காவல்துறை மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பாஜக துணைத் தலைவர்