தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா படம் இல்லாததால் அதிமுகவினர் வெளிநடப்பு - ஜெயலலிதா புகைப்படத்தால் சர்ச்சை

திண்டுக்கல்: ஆத்தூரில் நடந்த ஒன்றிய குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படம் இடம்பெறாததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

dindigul
dindigul

By

Published : Aug 5, 2020, 9:15 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய குழு கூட்ட அரங்கில் முன்னாள் முதலமைச்சர்கள், கருணாநிதி, அண்ணாதுரை, எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றது. ஆனால், ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படம் இல்லாததால் ஒன்றிய குழு கூட்டத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் கோபத்தை வெளிப்படுத்தினர். இது குறித்து அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜலெட்சுமி கேள்வி எழுப்பியதற்கு, தற்போதைய முதலமைச்சர் படத்தை வைக்க எனக்கு உடன்பாடு இல்லை என ஒன்றிய திமுகவைச் சேர்ந்த சேர்மன் மகேஷ்வரி பதிலளித்தார். இதனால், கூட்டத்தில் குழப்பம் நிலவியது. இதனைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் நான்கு பேரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும், முதலமைச்சர் பழனிசாமி நாளை (ஆகஸ்ட் 6) திண்டுக்கல் வரவுள்ள நிலையில், இன்று ஆத்தூர் யூனியன் அலுவலக கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கிராமங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் - சுகாதாரத்துறை செயலர்

ABOUT THE AUTHOR

...view details