அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழா தமிழ்நாடு முழுவதும் இன்று (அக.17) கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இவ்விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
வத்தலகுண்டு பிரதான சாலையான மூஞ்சிக்கல், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதிமுகவினர் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் இன்றியும் கலந்து கொண்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.