திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காத்தோப்பு மாசி மல்லம்மாள் கோயில் அருகே 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் புளிய மரத்தில் பெல்ட்டால் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருந்த இளைஞர் உடலை மீட்டனர். அந்த இளைஞரின் உடலானது தலையில் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்டியவாறு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது.