திண்டுக்கல்: சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுகவினரே பதிவிட்டு வருவதால் அதிமுகவினரிடையே குழப்பம் நிலவி வருகிறது .
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக சசிகலா அறிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி கண்டு ஆட்சியை இழந்தது. அமமுக கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. தொண்டர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியைச் சரிசெய்திட, சசிகலா 'ரீ-என்ட்ரி' கொடுப்பார் எனப் பரவலாகப் பேசப்பட்டது. இந்தநிலையில், அவர் தனது தொண்டர் ஒருவருடன் தொலைப்பேசி வாயிலாகப் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.