தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொதப்பலில் முடிந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம்; டென்ஷனான அதிமுக தலைமை - திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்: கொடைக்கானலில் அதிமுக சார்பாக நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சொதப்பலில் முடிந்ததால் அக்கட்சியினர் சோகமடைந்துள்ளனர்.

dini

By

Published : Mar 25, 2019, 11:25 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிமுக சார்பாக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை அறிமுகம் செய்துவைக்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். அப்போது இருக்கைக்காக தொண்டர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின் விழாவில் தூங்கிவிழுந்தமுன்னாள்சட்டப்பேரவை உறுப்பினர், நேரம் குறைய குறைய இருக்கைகளை காலிசெய்த தொண்டர்கள் என பல சொதப்பல்கள் அரங்கேறின. இந்த குழப்பம் அதிமுக தலைமைக்கு டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ’எந்த ஒரு கெட்டப்பழக்கமும் இல்லாத ஜோதிமுத்துவுக்கு வாக்களிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details