தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெபாசிட் பணம் கட்டாததால் அதிமுக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு! - admk candidate application rejected

திண்டுக்கல்: அதிமுக சார்பில் ஒன்றியக் கவுன்சிலருக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவிற்கு, டெபாசிட் தொகை செலுத்தாததினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

admk-counsellor-candidate-application-rejected-in-kodaikanal
admk-counsellor-candidate-application-rejected-in-kodaikanal

By

Published : Dec 18, 2019, 8:24 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில், கொடைக்கானலில் ஒன்றியக் கவுன்சிலருக்காக தாக்கல் செய்யப்பட்டவரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவரது மனைவி மரியாள். இவர் அதிமுக சார்பாக ஒன்றிய கவுன்சிலருக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

அதிமுக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு

அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனுவிற்கு உரிய ஆவணங்கள் இருந்தும், டெபாசிட் தொகையை செலுத்தாமல் போனதன் காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முக்கிய கிராம ஊராட்சிப் பதவியான ஒன்றிய கவுன்சிலர் பதவியில் ஒரு உறுப்பினரை அதிமுக இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட அதிமுக மற்றும் ஒன்றிய அதிமுகவினரிடையே இந்நிகழ்வு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் - அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details