தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிக்கும் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு கடந்த 19ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
திண்டுக்கலில் திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் ஒரேநாளில் வேட்புமனு தாக்கல் - திமுக, அதிமுக வேட்பாளர்கள்
திண்டுக்கல்: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பாமக வேட்பாளர் வேட்புமனு
இதேபோல்திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி இடம்பெற்றுள்ள பாமக சார்பில் ஜோதிமுத்து என்பவரும், திமுக சார்பில் போட்டியிடும் வேலுச்சாமி தங்களது வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தனர். வேட்பாளர்களுடன் இரு கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
திமுகவை பொறுத்தவரை வேட்பாளர் வேலுச்சாமியுடன் திமுக மாநில துணை பொதுச் செயலாளர் பெரியசாமி மற்றும் திமுக தோழமை கட்சியை சார்ந்த தலைவர்கள் உடனிருந்தனர்.