திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இன்று காலை முதல் மழை பெய்து கொண்டுருந்த நிலையில், ஈரோட்டிலிருந்து - சங்கரன் கோவிலுக்கு கர்சிப் லோடு ஏற்றிக்கொண்டு வந்த டாட்டா ஏஸ் (மினி லாரி), லாரி உள்ளிட்ட வாகனங்கள் மழையின் காரணமாக கவிழ்ந்து விபத்துகுள்ளனாது.
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து! ஒருவர் பலி! - ஒருவர் பலி
திண்டுக்கல்: கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நேர்ந்த தொடர் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஈரோட்டிலிருந்து - மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் கொரியர் வேன் கட்டுப்பாட்டை இழந்து, அதே சாலையில் முன்புறம் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சின்னச்சாமி என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் முருகன் என்பவர் படுகாயத்துடன் வேடசந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த தொடர் விபத்தால் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.