வடமதுரை :திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு சொந்தமான வீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை சேர்த்து 6 குடியிருப்புகள் உள்ளன. முதல் மாடியில் 3 குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். கீழே உள்ள மூன்று குடியிருப்புகள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (அக். 23) வீட்டின் பால்கனி மற்றும் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து கீழே இருந்த ஆஸ்பிடாஸ் கூரை மீது விழுந்தது. அப்போது கீழே நடந்து சென்ற விஜயா (வயது 40) என்ற பெண்ணின் தலையில் கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.