திண்டுக்கல்: வேடசந்தூர் அருகில் பூலாங்குளம் என்ற பகுதியில் சாக்குமூட்டையில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் ஒன்று இருப்பதாக வேடசந்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேடசந்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு சடலமாக கிடந்தவர் கீழதிப்பம்பட்டியைச் சேர்ந்த பாண்டீஸ்வரி என்பது தெரியவந்தது.
இதனிடையே பாண்டீஸ்வரி கணவர் அமுல்ராஜ் ஆந்திராவிற்கு கஞ்சா கடத்திச்சென்றபோது அங்கு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் பாண்டீஸ்வரி தனியாக வசித்து வந்த நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள சேடபட்டியைச் சேர்ந்த கௌசிக் பாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியது.